Wednesday, July 13, 2016

நான் ரசித்த கீச்சுகள் 13/07/2016

ஒ.உ.சிந்தனைகள் ‏@bommaiya
நாயர் கடைங்கள்ல  டீ சாப்பிடுற அத்தன பேரும் மிடில் கிளாஸ் தான் # அவர் என்னைக்கு நமக்கு  ஃபுல் கிளாஸ் டீ  போட்டுக் கொடுத்திருக்கார்...!
---------------------------------------------------------------------------------------------
sʍιʟɛʏ вօʏ™ ‏@smileyB0Y
கடைசியில் எல்லாம் சரியாகும் என்று நம்புங்கள்.😊
சரியாகவில்லையென்றால்,
இது கடைசி இல்லை என்று நம்புங்கள்..😎
----------------------------------------------------------------------------------------------
ஜெய் VJ ‏@i_am_v_jey  
எல்லாருடைய தேடுதலும் அன்பாய் இருப்பதினால் தான்..எல்லாருடைய குற்றசாட்டும் எனக்கு கிடைக்கவில்லை என்பதாய் இருக்கிறது..

----------------------------------------------------------------------
 ✍கிரியேட்டிவ் ЯΛJ ™ ‏@CreativeTwitz  
இந்த உலகத்துல 
கடமைச் செய்யவே 
காசு எதிர்பார்க்குது சமூகம் 
கருணை காட்ட 
காசு எதிர்பார்க்கதா

--------------------------------------------------------------------
காம்ரேட் பாலா ‏@SelvarajanBala  
நாடு கேட்பது தீவிரவாதம் என்றால் 
நாடு கேட்பது பயங்கரவாதம் என்றால்
என்ன மயிருக்கு பிரிட்டிஷ்காரன்கிட்ட நாடு கேட்டீங்க?

------------------------------------------------------------------------------------------
குழந்தை அருண் ‏@aruntwitz  
3G நெட் கார்டு போட்டு, வேலிடிட்டி டைம் முடியும் போதும், டேட்டா பேலன்ஸ் மிச்சம் வைத்திருப்பவர்களால், வாழ்வில் எதையும் சாதிக்க முடியும்.

--------------------------------------------------------------------------------
காம்ரேட் பாலா ‏@SelvarajanBala  
முத்தெடுக்க கடலில் மூழ்கி வெறுங்கையுடன் வந்தால் கடலில் முத்து இல்லை என்பது அர்த்தமல்ல நமது முயற்சி போதவில்லை என்பதே அர்த்தமாகும்.

---------------------------------------------------------------------------
 ⭐PãlãñîKÎÑG ⭐VJ ‏@palanikannan04  
ஒருபுறம் மரம் வளர்ப்போம்னு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரசாங்கம்,

மறுபுறத்தில் கான்டிராக்ட் விட்டு காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறது..

----------------------------------------------------------------------

ர.விவேக் ‏@vivekchandran07  
எப்படியும் விமர்சனம் செய்யத்தான் போகிறீர்கள், ஆதலால் நான் நினைத்ததை அனைத்தும் கூச்சமின்றி செய்யப்போகிறேன்.

அன்புடன்
அசோக் குமார் 

Friday, March 18, 2016

கோட்டை ராணியும் என் சகுன அனுபவமும்


ஒவ்வொரு மனிதரிடம் இருந்தும் பாடம் கற்கலாம் என உணர்த்திய அனுபவத்தை தான் எழுதலாம் என்று இருக்கிறேன். என் பால்ய காலங்களில் நண்பர்களாலேயே  அதிகம் ஆக்கிரமிக்கப்பட்டவன் நான். நான் உறங்கும் நேரம் உணவருந்தும் நேரம் தவிர ஊரின் நடுவே இருக்கும் அரசமர்த்தடிதான் எங்கள் ஊரின் மொத்த இளசுகளுக்கும் வேடந்தாங்கல். கொஞ்சம் சினிமாத்தனமாக சொல்கிறேன் என நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பாளி அல்லன்.


அந்த வயது பால்யங்களுக்கு உண்டான குறும்பும் கேளிக்கைகளும் எனக்கும் உண்டு என்றாலும் அதில் நான் பங்கேற்பதில்லை. எட்ட இருந்து ரசிப்பதோடு சரி. என்னைப்பற்றி ஏதேனும் புகார் வந்தால் எங்கள் வீட்டின் காவல்துறை என் மீது நடவடிக்கை எடுத்து விடும் அந்த பயம் தான்.

இப்போது இருப்பது போல் கழிப்பிட வசதியால் பற்றி பெரிய அளவிற்கு விழிப்புணர்வு கொண்டதல்ல எங்கள் ஊர். காலையில் எழுந்தவுடன் எங்கள் ஊரிலே பெரிய பணக்காரர் ஒருவருடைய கொல்லையில் தான் எங்கள் ஊர் முழுவதும் சென்று எருவிடும். கதைக்கு செல்லும் முன் இந்த கதை நாயகியை பற்றி சொல்லியாகவேண்டும்.

வயது அப்போதே எழுபதை தொட்டு இருக்கும். குழி விழுந்த கன்னங்கள். சற்றே கூன் விழுந்த தேகம். என்னை என்னும் வஸ்துவையே பார்த்திராத நரைத்த தலை. மண்வாசனை காந்திமதி போல் பேச்சில் எப்போதும் ஒருவித அதிகாரம். இத்தனை விசயங்களுக்கும் சொந்தக்காரிதான் "கோட்டை ராணி". அவளுக்கு உண்மையான பெயர் எங்களுக்கு தெரியாது. ஏன் அவளுக்கு "கோட்டை ராணி" என்ற பெயர்  வந்தது என்றும் எங்களுக்கு தெரியாது.
ஒல்லியான, சுருக்கங்கள் விழுந்த சுமாரான உயரம். யாரையும் எடுத்து எரிந்து பேசும் குணம். வம்பு சண்டைக்கும் போவாள் வந்த சண்டையையும் விடமாட்டாள்.ரோட்டில் போகும் நாய் கூட இவள் வீடு வந்தால் வேகமாய் கடந்து போய் விடும்.

இப்படியாக இருந்த கோட்டை ராணியிடம் சுடு சொல் வாங்க போகிறோம் என தெரியாமலே விடிந்தது. வழக்கம் போல் என் நண்பனும் வந்தான். என்ன டா  மணி ஆச்சு... போலாமா என்றான். நானும் அவனும் கெளம்பி போய்கொண்டு இருக்கையில்....................திடீர் என எங்கள் எதிரில் வந்து நின்றால் கோட்டை ராணி. காலையில் வாசல் சுத்தம் செய்ய மாட்டு சாணம் அள்ள செல்கில்றால் போல் பட்டது. அவளை பார்த்து விட்டு போனால் எந்த காரியமும் நடக்காது என ஊர் முழுக்க பேச்சு. என் நண்பனுக்கு அது ஞாபகம் வந்துவிட்டது போலும். என்ன நினைத்தானோ அவளை பார்த்த மாத்திரத்தில் என் கையை பிடித்து வந்த வழியே திரும்ப இழுத்தான்.

நாங்கள் அவளை பார்த்து உடனே திரும்புவதால் கோட்டை ராணியும் கண்டுவிட்டாள். நாங்கள் திரும்பிய திசையை பார்த்து " ஏண்டா என்னை பார்த்துவிட்டு போனால் உங்களுக்கு வருவதும் நின்னு போயிடுமோ? என்று கேட்டாளே ஒரு கேள்வி. எங்கள் இருவருக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை. நான் ஒன்றுமே பேசவில்லை. என் நண்பன் ஏதோ சொல்லி சமாளித்து விட்டு வந்தான்.

அன்றில் இருந்து யாரும் சகுனம் என்று சொன்னாலே கோட்டை ராணியின் நினைவு வருவதை தவிர்க்க முடிவதில்லை. 

Monday, March 14, 2016

நான் ரசித்த கீச்சுகளின் தொகுப்பு

போதிசத்வன் ‏@yasavi  
காதல் ஜோடிய வெட்டினப்புறம் திமிரோட ட்ரிபுள்ஸ் போரானுங்க பாருங்க!!! கண்டிப்பா புடிச்சு ஃபைன் போட்டே ஆகணும்!! ராஸ்கல்ஸ்!!  #சட்டம்

------------------------------------------------------------------------------------------------
மீனம்மா ‏@meenammakayal 
ஆற்றங்கரை, மாந்தோப்பு, கிணற்றடி, க்கு சற்றும் ஈடாகாது தற்காலத்தின் மால், சினிமா, பீச் ஊர்சுற்றிக் காதல் தனிமைகள்.

------------------------------------------------------------------------------------------------
 
Janu_B ‏@JanuBhaskarG
யாருமில்லையேனு தோணும்போ கஸ்டமர்கேருக்கு போன் போட்டு பேசினா போதும். அவங்களோட பணிவான பேச்சு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்..

-----------------------------------------------------------------------------------------------------
ǟռռǟɮɛʟʟɛ...!! ‏@jeniferak2  
சொர்க்கத்தின் வாயிலில் நின்று கொண்டு நரகத்திற்கு வழி கேட்டானாம் :-|

----------------------------------------------------------------------------------------------------

The Neel ‏@YoursNeel  
பகுத்தறிவு என்பது ஆறறிவுல்ல மனித இனத்திற்கு மட்டுமே படைக்கப்பட்டது.அஃதல்லாதவர்கள் மனித இனங்களில் வாரா.

-----------------------------------------------------------------------------------------------------
தேன்மிட்டாய் IPS ‏@Ohmslaw_  
பேசிகிட்டே இருப்பது மட்டுமல்ல,புரிந்துக்கொண்டு பேசாமலிருப்பதும் அன்பு தான்.

----------------------------------------------------------------------------------------------------

இளந்தென்றல் ‏@Elanthenral
ஆம்புலன்ஸ் சத்தத்தை கேட்டதும் 
அச்சச்சோன்னு சொல்றவன்லாம் புத்தனுமில்லை 

அத இமிட்டேட் பண்ணி கூவுறவன்லாம் கல் மனசுக்காரமில்ல
-------------------------------------------------------------------------------------------------------
மீனம்மா ‏@meenammakayal  
விரோதிகளிடம் வாழ்ந்து காட்டுவதில் எல்லாம் விருப்பம் இல்லை. என்னை விரும்புபவர்களின் மகிழ்வுக்காகவேணும் நன்றாக வாழ ஆசை.

------------------------------------------------------------------------------------------------------
பிரம்மன் ‏@altappu  
அம்மா வாய் வழியா புக்கை தூக்கி போட்டு வயித்துல இருக்கற குழந்தைக்கு ஏன் ஹோம் வொர்க் தர்றதில்லை?! பத்து மாசத்தை வேஸ்ட் பண்றானுகளே 

-------------------------------------------------------------------------------------------------------
 
சட்டம்பி கடவுள் ‏@stalinsk50
நான் தெரிந்தே செய்த தவறுகள் கண்டுபிடிக்கப்படும் போது அது எனக்கு தெரியாமல் நடந்த தவறாகிவிடுகிறது..

-----------------------------------------------------------------------------------------------------
✯சண்டியர்✯ ‏@BoopatyMurugesh  
எங்க CEO மகளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு..இல்லைனா நான் வேலை பார்க்குற ஆர்வத்த பார்த்து எனக்கே கட்டிவச்சுருவாரு...

----------------------------------------------------------------------------------------------------
குழந்தை அருண் ‏@aruntrichy0  
நம்ம பிரச்சினைக்கு அடுத்தவர்கள் சொல்லும் அட்வைஸ், ஆலோசனையாக மட்டுமே இருக்கலாம், அதுவே தீர்வாகி விடாது.

----------------------------------------------------------------------------------------------------
வி.தமிழ் சுகி ‏@Tamilsuhi  
எது மகிழ்ச்சி என்ற 
ஓர் நீண்ட தேடலில் 
முன் நாளில் துன்பம் என 
தூக்கி வீசப்பட்ட ஒன்று 
முன் நிற்கிறது

-----------------------------------------------------------------------------------------------