Wednesday, October 12, 2011

படித்ததும் பிடித்ததும்-13-10-2011

 கட்சி ஆரம்பித்ததில்  இருந்து மாறி மாறி திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்து பதவி சுகத்தை அனுபவித்து வந்த "மருத்துவர் அய்யா" இப்போ திராவிட கட்சிகளை ஒழித்து விட்டுதான் தன் ஸ்டெதஸ்கோப்பை கையில் எடுப்பேன் என்று சபதம் எடுத்திருக்கிறாராம். தன் மகன் அன்புமணிக்கு யாரும் "ராஜ்ய சபாவில் இடம் வாங்கி தர மறுத்துவிட்டதால் தான் இப்படி ஒரு அறிக்கையை விட்டு கோபத்தை வெளிப்படுத்துகிறார் என அவங்க  கட்சிக்காரங்களுக்கே தெரியும். சிவசம்போ!!!!!


---------------------------------------------------------------

 "வாகை சூட வா" படத்தின் பாடல்களை கேட்கும் வாய்ப்பு எனக்கு ரொம்ப தாமதமாகத்தான் கிடைத்தது. பெரும்பாலும் அனைவருக்கும் " சாரா சாரக்காத்து பாட்டே பிடித்திருக்கிறது. ஆனால் எனக்கு "போறானே போறானே" என்னை ரொம்பவே கவர்ந்திட்டது. கிராமத்து காதலை அப்பட்டமாக படம் பிடித்திருகிறது. பாடல்  வரிகளும்  அசல் கிராமத்து வழக்கில் இருக்கும் வார்த்தைகள். பாடலை எழுதியது "வைரமுத்து" என்றே நினைத்தேன் பிறகுதான் பார்த்தேன் அது ஒரு வளர்ந்து வரும் ஒரு இளம் கவிஞர் "கார்த்திக் நேதா" என்று.



தமிழ் சினிமாவில் நீங்காத இடம் பெரும் வைப்பு நிச்சயம் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. பாடலை நேகா பேசின், ரஞ்சித் இருவரும் இணைந்து பாடி இருந்தார்கள். ரொம்ப நாட்களுக்கு பிறகு நல்ல பாடலை கேட்ட உணர்வு.

 ---------------------------------------------------------------
நேற்று பேஸ் புக்கில், இந்த படத்தை பார்த்து கொஞ்சம் வியந்துதான் போனேன். டாஸ்மாக்கில் ஒரு பெண் வந்து சரக்கு வாங்கும் காட்சிதான் அது. 33  சதவீத இட ஒதுக்கீடு நாம தரமோ இல்லையோ அவங்களே எடுத்துக்குவாங்க போல.!!!
 -----------------------------------------------------------
உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம்.ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் அத்தீவுக்கு கரும்பு வெட்டுவதற்காக அங்கு சென்று குடியமர்த்தப்பட்டவர்கள் நம் தமிழர்கள். இன்னும் 30000  தமிழர்கள், இன்னும் தமிழர்களாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மங்காத  தமிழ் என்று சங்கே முழங்கு!!!!

  ------------------------------------------------------------------
இந்த பாடல் கேட்டதும்  எல்லோரையும் மயக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. இளையராஜாவின் இசைக்கு அடிமையான எல்லோரும் இந்த பாடலை விரும்புவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.  ஒரு முறை இசை அமைப்பாளர் "ரமேஷ் விநாயகம் " ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது எண்பதுகளில் இளையராஜா பரிட்சார்த்த முயற்சிகளில் இசையமைத்த பாடல்கள் இதுவரை சோடை போனதில்லை. ஆனால் பிற்ப்பாடு அதை நிறுத்தி விட்டார் அதானால் தான் அவர் தன பொலிவை கொஞ்ச காலத்திற்கு இழக்க வேண்டியதிற்று என்று, எதனை உண்மை அது. "கரும்பு வில்" படத்திற்காக இளையராஜா இசையமைத்த "மீன் கொடி தேரில்" என்ற பாடல் இன்றும் காலத்தால் அழியாமல் நிற்கிறது ஆண் குரலில் யேசுதாஸ் அவர்களும் பெண் குரலில் ஜென்சி அவர்களும் பாடி இருந்தார்கள்.

-----------------------------------------------------------
அன்புடன்
அசோக் குமார்

2 comments:

  1. //
    "மருத்துவர் அய்யா" இப்போ திராவிட கட்சிகளை ஒழித்து விட்டுதான் தன் ஸ்டெதஸ்கோப்பை கையில் எடுப்பேன் என்று சபதம் எடுத்திருக்கிறாராம்.
    //

    அவர் தூக்கத்துல உளறர்ரர்

    ReplyDelete