Thursday, June 16, 2011

துதி பாடுவதில் சிறந்தவர் வாலியா?? வைரமுத்துவா??

சென்ற கலைஞர் ஆட்சியில், தமிழ் திரை உலகம் படம் எடுத்தார்களோ இல்லையோ, கலைஞருக்கு மாதம்தோறும், விழுந்ததுக்கு ஒன்று எழுந்ததுக்கு ஒன்று என பாராட்டு விழாக்கள் நடத்தி களிப்புற்றனர். இந்த பாராட்டு விழாக்களில் முக்கிய துதி பாடிகள் கவிஞர் வாலியும், கவிஞர் வைரமுத்துவும். ஊழல் செய்து சிறைக்கு சென்ற கலைஞரின் மகள் கனிமொழி மற்றும் ராஜாவை செய்த சாதனைகளை பாராட்டி "ஊழல் தலைவனுக்கு சீராட்டு விழா" எடுத்து அதில் இந்த கவிஞர்கள் கவி பாடி இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.

கவிஞர் வாலி:


புறா, மீன் சாப்பிடும் பிராமின் என்று என்னை புகழ்ந்த எம்பெருமானே !!

திருக்குவளை தந்த புதல்வா!!
தமிழ்நாட்டில் ஊழலுக்கெல்லாம் நீ முதல்வா!!

 எம்பெருமானே!! நீ தொட்டால் தகரமும் தங்கமாகும் !!
தவளையும் சிங்கமாகும்..!!

பூமாரி!! தேன் மாரி!! நீ வாய் திறந்தால் பொழியும் வசை மாரி!!

எந்திரனுக்கு பிறகு ரஜினி படம் எடுத்தால் அது புதுசு!!
மோசடி, சுரண்டல் இதெல்லாம் உனக்கு அரத பழசு!!

நமீதா கையளவு துணியை உடம்பில் போட்டு நடித்தால் அது கச்சை!!
கதை எழுதுவதில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் எல்லாம் வாங்கவேண்டும் உன்னிடம் பிச்சை!!!

 இரண்டு இசைக்கருவிகளை ஒன்றாக வாசித்து கேட்டால் அது பியுசன்!!
ஊழல் செய்து மாட்டமலிருக்க அரசியல் வாதிகள் உன்னிடம் படிக்கவேண்டும் டியூஷன்!!!

சோனியா மீது உனக்கு அடிக்கடி வருகிறது உனக்கு வெறுப்பு!!
கனியை  விட சொல்லி டெல்லி வரை போயும் வேகவில்லை உன் பருப்பு !!

ஒரு ரூபாய்க்கு அரிசி தந்தாய் !! தொண்ணூறு ரூபாய்க்கு பருப்பு தந்தாய்!!
இதனால் மக்களுக்கு வெறுப்பை தவிர வேறென்ன தந்தாய் !!

சொல்வாய் ஊழலுக்கு நான் நெருப்பு!!
இதை கேட்டால் தயாளுஅம்மாளுக்கே வரும் வெறுப்பு!!!

(ரொம்பத்தான் ஓவரா போய்டமோ!! போன என்ன!!!)

வைரமுத்து: 

கவிஞர் வாலி அவர்களே!!
உங்கள் துதிக்கும் என் துதிக்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது.

ஏன் என்றால் நீங்கள் ஸ்ரீரங்கத்து சிவப்பு!!
நான் வடுகப்பட்டி கருப்பு !!!

திராவிடமும் ஆரியமும் உன் பொழுதுபோக்கு!! மாநில சுயாட்சிஎன்று எப்போதுமே உனக்கு விளையாட்டு !!!

வரலாற்றில் அறிந்த நீரோ மன்னன் ரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசிந்தானாம்..!!

நீ வாழும் நீரோ மன்னன்!! ஈழம் பற்றி எரிந்தபோது நீ மானாட மயிலாட பார்த்து களிபுற்றாய். ..!!

கை கட்டி வேடிக்கையும் பார்ப்பாய்!! போனபின் இரங்கல்பாவும் பாடுவாய் !!

முட்டை போண்டவிலிருந்து போண்டவுக்கே தெரியாமல் முட்டையை திருடும் செப்படி வித்தைக்காரன் நீ !!


விஞ்ஞானத்தில் அவரவர் பேன், கிரைண்டர் கண்டுபிடிக்க ஊழலை கண்டுபிடித்த நியூட்டன் நீ !!(நியூட்டன் ஆத்மா மன்னிக்க)

ஏய் குமாரா!! உற்று பார் தமிழ் மட்டும் படித்து இன்று ஆசிய பணக்காரர் ஆனவரை!!  

(இந்த துதி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா !!)

அன்புடன் 
அசோக் குமார்

21 comments:

  1. நன்றாக இருக்கிறது..நல்ல (கற்பனை) கவிதை! :) நன்றி

    ReplyDelete
  2. கையில் கணினி கிடைத்தவுடன் இன்று முளைத்த காளான் அந்த மூன்று சிகரங்களை விமர்சிக்கிறது. இது போல் நிறைய சின்ன புத்திக்காரர்களை பார்த்த அந்த மூவர் கூட்டணி மனசுக்குள்ளே சிரித்துகொள்கிறது. எப்போதுமே சூரியன் தன்னை பார்த்து குரைப்பவர்களை கண்டுகொள்வதில்லை. என்றும் காளான்கள் நிலைப்பதில்லை.

    ReplyDelete
  3. நயமாக கவிதை வடித்திருக்கிறீர்கள் நண்பரே. அற்புதம். ஆனாலும், இந்த இரண்டு பேத்துக்கும் கொஞ்சம் கூட புத்தி வேலை செய்யாதா என்று தெரியவில்லை. தரித்திரம் தாண்டவமாடிய ஆட்சி, கொடுங்கோலன் ஆட்சி, திரும்பியபக்கமேல்லாம் கொள்ளையடித்த ஆட்சி, இத்தனையும் தெரிந்தும் கருணாநிதிக்கு வெட்கமேயில்லாமல் இந்தப் பயல்கள் துதி பாடிக் கொண்டிருந்தனர். வாலி கிழவன், வயசானால், புத்தி மங்கிபோகுமோ என்ன இழவோ, வைரமுத்துவுக்கு என்ன ஆயிற்று? அவரும் எதற்கு ஒரு அயோக்கியனை துதி பாட வேண்டும், அப்படி பாடா விட்டால், இவர்கள் என்ன பட்டினி கிடந்தா செத்துப் போவார்கள், இருந்தும், இந்த மானங்கெட்ட விபச்சாரி பிழைப்பு இந்த பயல்களுக்கு எதற்கு?

    ReplyDelete
  4. பாராட்டுக்குறிய கவித்திறன்;
    தரங்கெட்ட கற்பனை.

    ReplyDelete
  5. அருமை நண்பரே அருமை

    ReplyDelete
  6. துதி பாடுவதில், வைரமுத்துவை விஞ்ச எவருமில்லை.

    ReplyDelete
  7. // சமுத்ரா said...

    நன்றாக இருக்கிறது..நல்ல (கற்பனை) கவிதை! :) நன்றி//

    உங்கள் பின்னூடத்திற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  8. // arulgene said...

    Vaali is super...//

    உங்கள் பின்னூடத்திற்கு மிக்க நன்றி !!

    ReplyDelete
  9. // Jayadev Das said...

    நயமாக கவிதை வடித்திருக்கிறீர்கள் நண்பரே. அற்புதம். ஆனாலும், இந்த இரண்டு பேத்துக்கும் கொஞ்சம் கூட புத்தி வேலை செய்யாதா என்று தெரியவில்லை. தரித்திரம் தாண்டவமாடிய ஆட்சி, கொடுங்கோலன் ஆட்சி, திரும்பியபக்கமேல்லாம் கொள்ளையடித்த ஆட்சி, இத்தனையும் தெரிந்தும் கருணாநிதிக்கு வெட்கமேயில்லாமல் இந்தப் பயல்கள் துதி பாடிக் கொண்டிருந்தனர். வாலி கிழவன், வயசானால், புத்தி மங்கிபோகுமோ என்ன இழவோ, வைரமுத்துவுக்கு என்ன ஆயிற்று? அவரும் எதற்கு ஒரு அயோக்கியனை துதி பாட வேண்டும், அப்படி பாடா விட்டால், இவர்கள் என்ன பட்டினி கிடந்தா செத்துப் போவார்கள், இருந்தும், இந்த மானங்கெட்ட விபச்சாரி பிழைப்பு இந்த பயல்களுக்கு எதற்கு? //

    இந்த துதி கநோளிகளை பார்த்தல் அவர்களுக்கு எப்படி தோணுமோ தெரியல அண்ணே

    ReplyDelete
  10. // Raja said...

    பாராட்டுக்குறிய கவித்திறன்;
    தரங்கெட்ட கற்பனை. //

    " இதுதான் வஞ்சபுகழ்ச்சி என்பதோ" சபாஷ் புலிகேசி ராஜ தந்திரங்களை கரைத்து குடித்திருகிராயாட "
    க க போ !!!!!

    ReplyDelete
  11. // கொள்ளென கொடுத்தல் said...

    கையில் கணினி கிடைத்தவுடன் இன்று முளைத்த காளான் அந்த மூன்று சிகரங்களை விமர்சிக்கிறது. இது போல் நிறைய சின்ன புத்திக்காரர்களை பார்த்த அந்த மூவர் கூட்டணி மனசுக்குள்ளே சிரித்துகொள்கிறது. எப்போதுமே சூரியன் தன்னை பார்த்து குரைப்பவர்களை கண்டுகொள்வதில்லை. என்றும் காளான்கள் நிலைப்பதில்லை. //

    கொல்லென கொடுத்தவரே !! நன்றி எனக்கும் கொடுதிரே ஒரு பட்டம் "நேற்று முளைத்த காளான்". நானே எனக்கொரு பேர் வச்சிருந்தாலும் அவ்ளோ நல்ல இருக்குமான்னு சந்தேகம், அப்புறம் அவங்க மூணு பெரும் என்ன பார்த்து சிரிக்கிறது இருக்கட்டும். இவங்களை பார்த்து தமிழ்நாடே சிரிக்குது அண்ணே!! அவங்க வாய எப்படி மூட போறீங்க. வீட்டுக்கு ஒரு டப்பா பெவிகால் இலவசமா தர சொல்லுங்க." அப்புறம் கைல கணினி கிடச்சா எழுதுரோமா.... இது உங்க தலைவர் கொடுத்தது இல்லிங்கோ... நம்ம கைக்காசு போட்டு வாங்கினது அண்ணாச்சி.. அடிக்கடி வாங்க எனக்கும் பொழுது போக மாட்டேன்குது.

    ReplyDelete
  12. // deeps vasan said...

    அருமை நண்பரே அருமை //

    உங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா!!

    ReplyDelete
  13. யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    துதி பாடுவதில், வைரமுத்துவை விஞ்ச எவருமில்லை.

    ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை நண்பா !!

    ReplyDelete
  14. நீ வாழும் நீரோ மன்னன்!! ஈழம் பற்றி எரிந்தபோது நீ மானாட மயிலாட பார்த்து களிபுற்றாய். ..!!// இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு, வயிறு எறிஞ்சி சொல்றேன் இந்த ஆளுக்கெல்லாம் நல்ல சாவே வராது.

    ReplyDelete
  15. ஆறு முறை தேசிய விருது வாங்கி தமிழ் சினிமாவுக்கே பெருமை தேடி தந்த வைரமுத்துவை இப்படி பேசுவது நல்லதல்ல.......
    நீயெல்லாம் தமிழனா????

    ReplyDelete
  16. // THAVEETHU GCE said...

    ஆறு முறை தேசிய விருது வாங்கி தமிழ் சினிமாவுக்கே பெருமை தேடி தந்த வைரமுத்துவை இப்படி பேசுவது நல்லதல்ல.......
    நீயெல்லாம் தமிழனா???? //

    தம்பி தாவீது,
    நான் தமிழன் என்று உங்களிடம் நிருபிக்கும் அவசியம் இல்லை, ஆறு முறை தேசிய விருது அவர் தமிழுக்குத்தான், அதை வைத்துக்கொண்டு யாருக்கும் துதி பாட அல்ல.

    ReplyDelete
  17. அண்ணே மன்னிக்கவும்.... அவரு துதி பாடுராரோ... இல்ல பாட்டு பாடுராரோ.... அது அவரோட விருப்பம். அதை ஏன் நீங்க விமர்சனம் பண்றீங்க..அவர் துதி பாடுனதால உங்களுக்கு ஏதும் பிரச்சனை ஏற்பட்டதா?
    அவ்வளவு பெரிய கவிஞர்களை விமர்சனம் செய்ய குறைந்தபட்ச தகுதி தாங்களிடம் உள்ளதா என்று எண்ணி பாருங்கள்......

    ReplyDelete
  18. தம்பி தாவீது,
    அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருப்பதாக நீங்கள் நினக்கிறிரோ,அதே தகுதி எனக்கு அவர்களை விமர்சிப்பதற்கும் இருப்பதாக நினைக்கிறேன். மேலும் ஒரு நடிகனை விமர்சிக்க நானும் நடிகனாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு அரசியல்வாதியை விமர்சிக்க நானும் அரசியல்வாதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    ReplyDelete
  19. ”ஒரு நடிகனை விமர்சிக்க நானும் நடிகனாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு அரசியல்வாதியை விமர்சிக்க நானும் அரசியல்வாதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ”


    டேய் இத எல்லாம் எங்கடா உக்காந்து எழுதுகிட்டு வர்றீங்க??? ஹா ஹா ஹா அருமையான பன்ச். நல்லா எழுதுறீங்க நண்பரே !!!! வாழ்த்துக்கள்.

    ReplyDelete