Monday, March 28, 2011

மழை கவிதைகள்-I

மழை கவிதைகள்-I

சூரிய காதலன்


ஏ மழையே! நான் வருவேன்
என தெரிந்து பூக்களுக்குள்  
ஒளிந்து இருந்தாய் பூக்களை
பற்றி தான் எனக்கு தெரியுமே.
எனை பார்த்து பூக்கள்
மலர்ந்து உன்னை
காட்டி கொடுத்துவிட்டனவே
=========================================================

ஆலங்கட்டி மழை



உதிர்ந்த
வெண்முத்துகளை 
எடுக்கத்தான்
முடிந்தது
கோர்த்து
வைக்க நான்
என் செய்வேன்

===================================================
மழை வேண்டி
 
யாகம் வளர்கிறார்கள்
கழுதைக்கும் கழுதைக்கும்
கல்யாணம் என்கின்றனர்
பெண்கள் எல்லாம் சேர்ந்து
ஊர் எல்லையில் கூடி
அழுகிறார்கள்  மரம் வளர்ப்பதை
மட்டும் தவிர்த்து

==========================================================
நனைவது பிடிக்கும்


சிலருக்கு மழையில்
நனைவது
பிடித்தமான ஒன்றுதான்
குடையை மறந்த
நாட்களில் மட்டும்

=======================================================
நல்லவர் ஒருவர் உளரேல்



இப்போதெல்லம்
நல்லவர்களை
அடையாளம் காட்ட
மட்டும்தான்
வருகிறாய்
போலும்

=========================================================
அன்புடன்
அசோக் குமார்

1 comment:

  1. சிலருக்கு மழையில்
    நனைவது
    பிடித்தமான ஒன்றுதான்
    குடையை மறந்த
    நாட்களில் மட்டும்

    நல்ல வரிகள்

    ReplyDelete