Tuesday, March 15, 2011

வசந்தமாக வந்தாள்

காதலிப்பது பெண்கள் வேலை - அதை
       கண்டுபிடிப்பது ஆண்கள் வேலையாம்!!!
அதை கூட சரியாக செய்யவில்லை- நான்
       பொறுத்து பார்த்தபின் நீயே சொன்னாய் ஒருநாள்!!!
பட்டம்பூச்சியின் சிறகுகளை கடன் வாங்கி பறந்ததை- போல்
       அந்த நினைவுகள் நிற்கும் நூற்றாண்டுகள் தாண்டியும்!!!!
பல உன் வினாக்களுக்கு விடை தெரியாமல் விழித்தேன்- நான்
         குறுநகை புரிந்து ஏற்றுகொண்டாய் நீ!!!
ஒன்று சேர்வோமா என்ற ஐயம் - உனக்கு
          தேற்றுவதை தவிர வழி ஏதும் இல்லை எனக்கு!!!!
காலசக்கரம் சுழன்றது வேகமாய்  - ஒருநாள்
       என்னிடமிருந்து உன்னை பிரிக்கும் என்று தெரியாமலே மகிழ்ந்தேன்!
பிரிவு என்ற சொல்லை நான் அறிந்த நாள், நாம்- பிரிந்தநாள்
       அழி பேரலையில் அடித்து செல்லப்படும் ஓடம் போல்-ஆனேன்
அழக்கூட முயற்சிக்கவில்லை, ஆண் மகன்  அழக்கூடதாம்!!
         போகட்டும் என் குழந்தைக்காவது உன் பெயரிட்டு- உன்னை 
நினைக்கவேண்டும் வசந்தமாக நீ, என் வாழ்வில் வந்ததற்காக!!!!

அன்புடன்
அசோக் குமார்

(Thanks to google for the image)

2 comments:

  1. கவிதை அருமையிருக்கு தோழரே...
    இனி தொடர்ந்து வருகிறேன்..

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!!

    ReplyDelete