Wednesday, August 18, 2010

புலி வால் பிடித்தவன்

Thanks to Google images
நான் ஏன் இந்த தலைப்பை என் வலை பதிவிற்கு வைத்தேன் என்பதை சொல்ல குறைந்தது நூறு பக்கமாவது எழுத வேண்டி இருக்கும். புலி என்றால் நீங்கள் வேறு எதையும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். எனக்கு என்ன தகுதி இருக்கிறது ஒரு வலை பதிவை வைத்துகொள்ள என்று யோசித்தபோது என் மனதில் உதித்தவை. முதல் காரணம் நான் தமிழன். மற்றுமொரு காரணம் நான் ஆராய்ச்சி பட்டம் பெற்ற மாணவன். முன்றாம் காரணம் நான் பணிபுரிவது உலக வல்லரசாம் அமெரிக்காவில். இந்த காரணங்கள் போதுமா? தெரியவில்லை!! தமிழின் அருமை தமிழ்நாட்டில் இருந்தால் தெரியாது என்று யாரோ ஒரு பேச்சாளர் பேச கேட்டு இருக்கிறேன். அதை அனுபவமாக உணர்தவன் நான். என்ன இவனுக்கு திடீர் என தமிழ் மீது பற்று என நீங்கள் கேட்கலாம். நான் அமெரிக்கா வந்து மூன்று மாதங்கள் முடிய போகிறது ஒரே ஒரு தமிழ் பெண்மணி கூட மட்டுமே பேசும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அவரும் தமிழ் நாட்டை சேர்த்தவர் அல்ல. ஈழ தமிழ் பெண்மணி. ஆக இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் நான் ஏன் தமிழ் மீது திடீர் என அக்கறை படுகிறேன் என. சொல்ல வெட்க கேடான சங்கதி நான் அந்த ஈழ தமிழ் பெண்மணியுடன் பேச மிகவும் சிரமப்பட்டேன் என்பதுதான். அவர் நல்ல சுத்த தமிழில் பேச நானோ நம் சென்னை தமிழில் பேச! அவமானம் யாருகென்று உணர்ந்து இருக்க வேண்டும். பிறகு நான் ஏன் இந்த வலை பதிவை துவங்கினேன் என்றால் இனியாவது நான் தமிழனாக பிறந்ததற்கு ஏதாவது செய்யவேணும் எனில் சுத்த தமிழனாக வாழவேண்டும் என்பதுதான். இனி வரும் காலங்களில் நிறைய படித்து மற்றவர்க்கு உதாரணமாக வாழவேண்டும் என நினைகிறேன். நான் எழுத முன் உதராணமாக இருக்கும் செய பிரகாஷ்வேல் அவர்களுக்கு நன்றி!