Saturday, December 25, 2010

விரும்புகிறேன்

விரும்புகிறேன்

"நீ என்னை நேசிக்கிறாய்" என்று சொல்வதை விட..
"நீ என்னை பிரியமாட்டாய்" என்று சொல்வதைத்தான்
நான் அதிகம் விரும்புகிறேன்...!♥♥♥

முக புத்தகத்தில் படித்தது..... 

Thursday, December 16, 2010

சிங்களவனின் போர் குற்றங்கள்

சிங்களவனின் போர் குற்றங்கள்
சில நாட்களாக சேனல் 4 தொலைகாட்சியில்   சிங்கள ராணுவம் செய்த அட்டுழியங்களை ஒளிபரப்பு செய்கிறார்கள். இளகிய மனம் படைத்தவர்கள் இதை பார்பதை தவிர்க்கவும். சாகும் தருவாயிலும் நெஞ்சில் காயம் பட்டு மடிந்த மற தமிழர்களை  பேடிகள் போல் முதுகில் சுட்டு வீழ்த்தும் கொடிய காட்சிகளை பாருங்கள்!
மேலும் படிக்க கீழுள்ள சுட்டியை அழுத்தவும்.

அகதி

                   அகதி

ஒரு இடத்தில் இருந்து பிடுங்கி - இன்னொரு
இடத்தில் நடும் செடிக்கு கூட தாய்மண்!!
கொஞ்சம் வேரோடு ஒட்டி இருக்கும்- எங்களுக்கு
அந்த கொடுப்பினையும் இல்லை!!

Tuesday, December 14, 2010

நான் ரசித்த திரைப்படம்

நான் ரசித்த திரைப்படம்-பார்த்திபன் கனவு!!!!
Thanks to google images for the picture
 இயக்குனர் கரு. பழனியப்பன் அவர்களின் முதல் படம், ஆனால் பத்து படங்கள் எடுத்தது போன்ற ஒரு தேர்ந்த படத்தை எடுத்துள்ளார். தலைப்பே மிகவும் கவித்துவமான ஒன்று. அமரர் கல்கி அவர்கள் எழுதிய "பார்த்திபன் கனவு"  என்ற நாவலில் இருந்து எடுத்துள்ளார்கள் என நினைக்கிறேன்.
இயக்குனரின் பிந்தைய படங்களான சிவப்பதிகாரம், சதுரங்கம் மற்றும் பிரிவோம் சந்திப்போம் என தலைப்புகளில் என்னே  கவித்துவம்!!!!!!.

சரி கதைக்கு வருவோம்......... கதை ஒன்றும் புதிது அல்ல ஆயினும் அதை சுவாரசியமாக சொன்ன விதம் சபாஷ்....... போட வைக்கிறார் பழனியப்பன்.
ஒரு நடுத்தர குடும்பத்தில் ஹீரோ.... அப்பா, அம்மா மற்றும் தாத்தாவோடு இருக்கிறார். எந்த வேலையிலும் முழுதாக ஒரு மாதம் கூட இருக்கமாட்டார். அவருடன் திரைப்படத்துக்கே இலக்கணமான மூன்று நண்பர்கள். ஒரு கட்டத்தில் சினேகாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். ..... அப்பாவின் வற்புறுத்தலின் பேரில் வேண்டா வெறுப்பாக பெண் பார்க்க போகிறார்.  அங்கே சினேகாவே மணப்பெண் கோலத்தில் காபீயுடன் வர நமக்கே ஆச்சரியம்...... ஸ்ரீகாந்துக்கு இருக்காதா......!
பிறகென்ன கல்யாணம் சுபம்......
இதுவரையில் சுவாரசியமே இல்லாமல் போய்கொண்டு இருந்த திரைக்கதையில் திடீர் மாற்றம்....... கல்யாணம் முடித்து வரும் வேளையில்... ரோட்டில் நடந்து வரும் சினேகாவை பார்த்தவுடன் ஸ்ரீகாந்த் தலையில் இடி.!!!!!
அதன் பிறகு தான் காதலித்த சினேகாவை தேடி கேரளா செல்கிறார்... அங்கும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் பரிதாபமாக சென்னை வருகிறார்........
வீட்டிற்கு வந்தால் ஆச்சர்யம் எதிர் பிளாட்டில் காதலி சினேகா குடிவர உள்ளுக்குள் சந்தோஷம்.......!!!!!!!!! ஆனாலும் மனதுக்குள் ஒரு உறுத்தல்!!!!!!!
ஒரு நாள் இந்த விஷயம் மனைவி சினேகாவுக்கு தெரிய வர வீட்டுக்குள் பூகம்பம்......!!!!!!!!! அப்புறமென்ன எல்லோருக்கும் மன நிறைவை ஏற்படுத்தும் கிளைமாக்ஸ்!!!!!!!!!
குடும்ப படத்தை கூட இப்படி சுவாரசியமான  திரை கதையோடு சொல்லி இருக்கிற இயக்குனர் கரு. பழனியப்பனுக்கு ஒரு சபாஷ்......
முதல் விஷயம் ஸ்ரீகாந்த் மற்றும் சினேகாவுக்கும் உள்ள வேதியியல் (அதாங்க chemistry) ரொம்ப நல்லா இருக்கு.
நடுத்தர வர்க்க குடும்பத்தை அழகாக காட்டியுள்ளார் இயக்குனர். காலையில் தோசை சுடும் அம்மா, குளித்து பேப்பர் படிக்கும் அப்பா, பழைய ரேடியோ பெட்டியை ரிப்பேர் பார்க்கும் தாத்தா, எட்டு மணி வரை தூங்கும் ஸ்ரீகாந்த் என நம் வீட்டில் நடப்பதை போல உணரலாம்.

ஸ்ரீகாந்துக்கு நடிக்க நல்ல வாய்ப்பு அதை மிக அழகாக பயன்படுத்தி கொண்டார். இந்த படத்திற்கு பிறகுதான் ஸ்ரீகாந்தின் மார்க்கெட் உயர்ந்தது என சொல்லலாம். மனைவிக்கு உண்மை தெரிந்த பிறகு இவர் காட்டும் உணர்சிகளும்,  கிளைமாக்ஸ் காட்சியில் இவரின்  நடிப்பும் பிரமாதம்.

video
சரி முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.... அதன் புன்னகை இளவரசி சிநேகாவதாங்க சொல்றேன்... இரட்டை வேடம் ரெண்டுமே வித்தியாசமான கதாபாத்திரம் பின்னி எடுத்திருக்காங்க சினேகா. இந்த படத்துல அப்போ அப்போ சிரிச்சி புன்னகை இளவரசின்னு சொல்ல வச்சிருக்காங்க. மனைவியா வர சினேகா பாந்தமா நடிச்சிருக்காங்க. புருசனுக்கு அடங்கின மனைவியா , விட்டு கொடுத்து வாழணும்னு சொல்ற வசனங்கள் அருமை!!!!!! படம் பார்க்கின்ற நிறைய ஆண்கள் எல்லாம் நமக்கு இப்படி ஒரு பொண்டாட்டி கெடைக்க மாட்டங்களான்னு பொறாமைபட வச்சிருக்காங்க..... !!!!!!!  படத்தை பார்த்தால் புரியும்!!!!!!!!!!!
video
நகைச்சுவைக்கென விவேக்!!! இவர் அறிமுக காட்சியே அமர்க்களம்.... தேவதரிசினி மற்றும் விவேக் காட்சிகள் கலகல!!!!!!!! என்ன நடிகர் திலகத்தை கலாய்த்து இருக்கிறார்.... அதை தவிர்த்து இருக்கலாம்!!! டிராபிக் போலீசிடம் ஆங்கிலம் பேசி தப்பிக்கும் காட்சி பிரமாதம்......
video
பாடகர் தேவன் இந்த படத்தில் அறிமுகம் ஸ்ரீகாந்தின் நண்பராக வந்து போகிறார்!!!! போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் சட்டை இல்லாமல் பார்க்கும்போது  சிரிப்பை தவிர்க்க முடியாது.....
வசனங்கள் சில இடங்களை நெஞ்சை தொடுகின்றன... குறிப்பாக ஸ்ரீகாந்த் சொல்லும் "கலைஞ்சு இருந்ததம்மா வீடு இல்லைனா அது மியுசியம்" அப்புறம்

இசை அமைத்தவர்  வித்யாசாகர்!!! பாடல்கள் எல்லாமே கேட்கும்படி இருக்கு!!1 முக்கியம் மெலடி பாட்டு ரொம்ப நல்ல இருக்கு...  "ஆலங்குயில்" பாட்டு ரொம்ப அற்புதம் பாட்டை எழுதினது கபிலன்... பாட்டுலயே சின்ன சின்ன கவிதைகள்... புது முயற்சி தான்... எனக்கு ரெண்டு கவிதை புடிச்சு இருக்கு
வெட்கம்
இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தைதான்!!!!
காதல்
நம் நான்கு கண்ணில் காணுகின்ற ஒற்றை கனவு!!!
அந்த பாடல் இங்கே!!! கேட்டு மகிழுங்கள்
video
இந்த படத்தில் முக்கியமான விஷயம் என்னன்னா நீங்க குடும்பத்தோட பார்க்கலாம்.... பாக்யராஜ் ஒரு தாவணி கனவுகள்ல சில்லறை போடுவாரே அது மாதிரி சில்லறை எல்லாம் போட்டுட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்ல...
பின் குறிப்பு : விக்கிபீடியா தளத்தில் இந்த படத்தை பற்றி சில விஷயங்கள் சுவாரசியமா இருந்தது. படம் மூணு கோடி ரூபா பட்ஜெட்ல எடுத்து 25 கோடி அள்ளி இருக்காங்க....

Monday, December 13, 2010

சொல்லி வை

                                                          Thanks to google images for the picture

சொல்லி வை உன் காலணிகளுக்கு!!!!
நான் உன்னை பார்க்கும்போதெல்லாம்- அவை
என்னையே முறைத்து பார்க்கின்றன!!!!!!

Saturday, December 11, 2010

ரகசியங்கள்


                                                         Thanks to Google images

பேருந்தில் அறியாமல் நான் உரசிய பெண் முறைத்த முறைப்பும்!!!
வயிறு முட்ட குடித்து வாந்தி எடுத்ததையும்!!!!!
அப்பாவின் சட்டை பையில் பணம் எடுத்து அகப்பட்டதையும் !!!!!!
நான் நேசித்த பெண்ணிடம் இதுவரை என் காதலை சொல்லாததும் !!!!!
இதுவரை நான் பாதுகாக்கும் ரகசியங்கள் !!!!!! 

Friday, December 3, 2010

முரண்பாடு

ஏன் இந்த முரண்பாடு
எந்த ஆயுதத்தை கையில் எடுக்கிறாயோ!!!
 அதனால்தான் உனக்கு மரணம் என படித்த ஞாபகம்.... !!!!
ஆனால் காந்திக்கு மட்டும் ஏன் தோட்டாக்கள் !!!!!!!!!!!

Sunday, November 28, 2010

பெயராசை

                                               Thanks to Google images
எனக்கு பேராசை எல்லாம் ஏதும் இல்லை!!!
உன் பெயருக்கு பின்னால்!!!!!
என் பெயர் வர வேண்டுமென்கிற
"பெயராசை" தான் உண்டு!!!!!!!!

"வலை பதிவில் படித்தது"

Wednesday, August 18, 2010

புலி வால் பிடித்தவன்

Thanks to Google images
நான் ஏன் இந்த தலைப்பை என் வலை பதிவிற்கு வைத்தேன் என்பதை சொல்ல குறைந்தது நூறு பக்கமாவது எழுத வேண்டி இருக்கும். புலி என்றால் நீங்கள் வேறு எதையும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். எனக்கு என்ன தகுதி இருக்கிறது ஒரு வலை பதிவை வைத்துகொள்ள என்று யோசித்தபோது என் மனதில் உதித்தவை. முதல் காரணம் நான் தமிழன். மற்றுமொரு காரணம் நான் ஆராய்ச்சி பட்டம் பெற்ற மாணவன். முன்றாம் காரணம் நான் பணிபுரிவது உலக வல்லரசாம் அமெரிக்காவில். இந்த காரணங்கள் போதுமா? தெரியவில்லை!! தமிழின் அருமை தமிழ்நாட்டில் இருந்தால் தெரியாது என்று யாரோ ஒரு பேச்சாளர் பேச கேட்டு இருக்கிறேன். அதை அனுபவமாக உணர்தவன் நான். என்ன இவனுக்கு திடீர் என தமிழ் மீது பற்று என நீங்கள் கேட்கலாம். நான் அமெரிக்கா வந்து மூன்று மாதங்கள் முடிய போகிறது ஒரே ஒரு தமிழ் பெண்மணி கூட மட்டுமே பேசும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அவரும் தமிழ் நாட்டை சேர்த்தவர் அல்ல. ஈழ தமிழ் பெண்மணி. ஆக இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் நான் ஏன் தமிழ் மீது திடீர் என அக்கறை படுகிறேன் என. சொல்ல வெட்க கேடான சங்கதி நான் அந்த ஈழ தமிழ் பெண்மணியுடன் பேச மிகவும் சிரமப்பட்டேன் என்பதுதான். அவர் நல்ல சுத்த தமிழில் பேச நானோ நம் சென்னை தமிழில் பேச! அவமானம் யாருகென்று உணர்ந்து இருக்க வேண்டும். பிறகு நான் ஏன் இந்த வலை பதிவை துவங்கினேன் என்றால் இனியாவது நான் தமிழனாக பிறந்ததற்கு ஏதாவது செய்யவேணும் எனில் சுத்த தமிழனாக வாழவேண்டும் என்பதுதான். இனி வரும் காலங்களில் நிறைய படித்து மற்றவர்க்கு உதாரணமாக வாழவேண்டும் என நினைகிறேன். நான் எழுத முன் உதராணமாக இருக்கும் செய பிரகாஷ்வேல் அவர்களுக்கு நன்றி!